சோழவந்தான் அருகே தென்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள தென்னை மரங்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பேருந்து நிறுத்தம் அருகில் பொதுமக்கள் அதிகம் நடமாடும்சாலை ஓரங்களில் உள்ள தென்னை மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் துரை நாகுச்சாமி சேர்வை கூறுகையில்..,
சோழவந்தான் அருகேதென்கரை வைகை பாலம் பகுதியில் அகிலாண்டேஸ்வரி கோவில் செல்லும் வழியில் சாலையின் ஓரங்களில் ஆபத்தான நிலையில் சாய்ந்த நிலையில் தென்னை மரங்கள் உள்ளது. இந்த மரங்கள் எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு சாலையில் விழும்போது பொதுமக்கள் செல்லும் நிலையில் உயிர் சேதம் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர். ஆகையால் தென்கரை ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் அளித்து ஆபத்தான நிலையில் உள்ள தென்னை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதற்கு மாற்றாக கிராமத்தின் மற்ற பகுதிகளில் தென்னங்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும் இவ்வாறு கூறினார்.
