• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜேம்ஸ்பாண்ட படங்களுக்கு இசையமைத்தவர் மரணம்

ByA.Tamilselvan

Jul 12, 2022

உலக புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு அதிகாரப்பூர்வ தீம் மியூசிக்கை இசையமைத்த மான்டிநார்மன் காலமானர்
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தீம் மியூசிக்கை இசையமைத்த பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மான்டி நார்மன் காலமானார். அவருக்கு வயது 94.
1928ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி லண்டனில் பிறந்த நார்மன், தனது இசைப்பயணத்தை பாடுவது மூலம் தொடங்கினார். பெரிய இசைக்குழுக்களில் பாடிவந்த நார்மன் பின்னர் இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்தார்.1962ஆம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான டாக்டர் நோ என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் இவரே. அவன் பிறகே நார்மன் உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக மாறினார்.
அதன்பிறகு வெளியான 24 ஜேம்ஸ் பாண்ட படங்களிலும் அவரது தீம் மியூசிக் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.