• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தாயை மறந்த தனயன்கள் . . . தாய்க்கு இறுதி காரியம் செய்த 4 மகள்கள்

தாயின் இறுதிச்சடங்கில் மகன்கள் கலந்து கொள்ளாததால், நான்கு மகள்களே சுடுகாட்டிற்குத் தாயின் சடலத்தை தோளில் சுமந்து சென்று இறுதிச் சடங்குகள் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள மங்களகாட் பகுதியில் ஜதி நாயக் என்ற மூதாட்டி நேற்று காலமானார். இவருக்கு 6 பிள்ளைகள் இருந்தும் கடைசி நேரத்தில் யாரும் உடனில்லை. மகள்கள் திருமணமாகி கணவருடன் சென்றுவிட்டனர். ஆனால்இரு மகன்களும் தாயியை கவனித்துக்கொள்ளாமல் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக மூதாட்டியை அவரின் மகன்கள் புறக்கணித்து வந்துள்ளனர். கணவர் இறந்த பிறகு மூதாட்டி, சிறு வியாபாரம் செய்து தன்னுடைய உணவுக்கான செலவுகளை செய்து வந்துள்ளார்.


இந்த நிலையில் மூதாட்டி இறந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரது இரண்டு மகன்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் இறுதிச் சடங்குகளை செய்ய வரவில்லை. ஆனால், சகோதரர்களை புறந்தள்ளிய 4 மகள்களும் தாயை தகனம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக சுடுகாடு வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம், தங்கள் தாயின் உடலை 4 பெண்களும் சுமந்துசென்றனர். பின்னர் கண்ணீர் மல்க தாயின் இறுதிச் சடங்குகளை செய்து முடித்தனர்.