• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் மனித சங்கிலி போராட்டத்தில் தளவாய்சுந்தரம் தமிழக அரசுக்கு எதிராக கோசம்

அதிமுக பாஜக கள்ளக்காதலின் பாதையில் தளவாய்சுந்தரம் ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை காவிகொடி அசைத்து தொடங்கி வைத்ததால் கட்சி மேலிடம் நடவடிக்கையா.? தமிழகத்தில் கோவை, குமரி மாவட்டம் பாஜக சற்றே செல்வாக்கு பெற்ற மாவட்டம்.

கடந்த ஞாயிறு (அக்டோபர்_6)ம் நாள் குமரி மாவட்டம் ஈசாந்தி மங்கலத்திலிருந்து,
பூதப்பாண்டி வரையிலான ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் காவி கொடியை அசைத்த போதே அதே இடத்தில் நின்ற பொது மக்களின் மத்தியில் ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது.!!

தளவாய் சுந்தரம் அந்த இடத்தை விட்டு கடந்த அடுத்த நொடியே அந்த பகுதியில் கூடியிருந்த இளைஞர்கள் சற்று உறத்த குரலில் பாஜகவுடன், அதிமுகவின் கள்ளகாதலின் அடையாளம் என பேசியதை பலரும் செவி மடுத்தனர்.

குமரி மாவட்டம் அரசியல் விழிப்புணர்வு அதிகம் பெற்ற மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் மத்தியில் நடந்த விவாதம் காஷ்மீர் மற்றும் ஹரியானா தேர்தல் முடிவு பற்றிய அலசலுக்கு மத்தியில் திமுக அரசை எதிர்த்து இன்று அதிமுக சார்பில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்.

கன்னியாகுமரி அஞ்சுகிராமம் நாகர்கோவிலில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துக்கொண்ட தளவாய் சுந்தரம் தமிழக அரசுக்கு எதிராக கோசம் எழுப்பினார். மூன்று இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான கட்சியின் ஆட்சியில் பதவி வகித்தவர்கள் பலரும். ஏன் அண்மையில் அதிமுகவில் சேர்ந்த நசரேயன் பசலியான் கூட கலந்து கொள்ளாதது.

குமரி மாவட்ட அதிமுகவில் கோஷ்டிகள் பல குழுக்களாக இருப்பது. அதிமுக தலைமை தளவாய் சுந்தரம் கட்சியில் வகிக்கும் கழக அமைப்பு செயலாளர், குமரி மாவட்ட செயலாளர் ஆகிய இரண்டு பொறுப்புகளில் இருந்து தற்காலிகமான நடவடிக்கையாக இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி தளவாய் சுந்தரம் மீது எடுத்துள்ள நடவடிக்கை குமரியில் தளவாய்சுந்தரத்தின் விசுவாசிகள் மத்தியில் பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தளவாய் சுந்தரத்திற்கு நீக்கல் என்ற சொல் பழகிப்போன ஒரு சொல். முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்து ஒரு முறை நீக்கினார்,பின்பு ஒரு முறை குமரி மாவட்டம் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார், மீண்டும் அந்தப் பதவிகள் அவருக்கு கிடைத்தது என்றாலும். கன்னியாகுமரி சட்ட உறுப்பினர் என்ற பதவி அதிகாரம் பெற்ற பதவி என்றாலும் அவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருந்தால் தான் வகிக்கும் மக்கள் பிரதிநிதி என்ற பதவி வலுவானதாக இருக்கும் என்பதை இயல்பாகவே உணர்ந்து கொண்டவர் தளவாய் சுந்தரம் என்றாலும், அதிமுக, பாஜக உறவை விட்டு வெளியே வந்து விட்டோம் என எடப்பாடி “சூடத்தை” அடித்து சத்தியம் செய்தாலும் தமிழகத்தில் உள்ள எந்த கட்சியினரும் நம்பாத நிலையில், பொதுவாக எடப்பாடி பழனிச்சாமி மீது உள்ள குற்றச்சாட்டு மோடிக்கு எதிராக எப்போதாவது எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளாரா என்ற கேள்விகள் தொடர் ஓசையுடன் ஒலித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் காவி கொடி அமைந்ததுதான் இந்த நடவடிக்கையா.? என்ற விடை தெரியாத கேள்வி குறிக்குள் அதிமுக கட்சியினர்.