குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில், ஓட்டு திருடு குறித்து ஜனாதிபதிக்கு புகார் அனுப்ப காங்கிரஸ் கட்சி சார்பில், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கையெழுத்து இயக்கம் துவங்கி வைத்தார்.
பாஜக உள்துறை அமைச்சர் அமிர்ஷா கூட்டணி கட்சியான அதிமுகாவை இயக்குகிறார் அமித்ஷா கூறுவதையே எடப்பாடி செய்கிறார் என பேட்டி…,
வாக்கு திருடு கையெழுத்து இயக்கம் துவக்க விழா கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் வினு லால் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் நிகழ்ச்சியை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..,
இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கடந்த மாதம் ஏழாம் தேதி அன்று இந்திய ஜனநாயகத்தில் ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது அரசியல் அமைப்புச் சட்டம் மிக தெளிவாக முகப்புரையில் கூறி உள்ளது. மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்க கூடிய ஆட்சி அமைய வேண்டும் அந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்று தெளிவாக கூறி இருக்கிறது. ஆனால் ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் வகையில் தனிமனித உரிமையை பறிக்கும் வகையில் வாக்கு திருடு நடந்தது என்பதை பற்றி இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலை இந்திய மக்களுக்கு செய்தியாளர் மத்தியில் ராகுல் காந்தி எடுத்து சொன்னார்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் மத்திய மகாதேவ் புறா என்ற சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து நாலாயிரம் போலி வாக்காளர்கள் எப்படி சேர்க்கப்பட்டார்கள்
சீரோ என்ற முகவரியில் எத்தனை வாக்குகள் உள்ளன சிறு அறையில் 80 பேர் எப்படி வாக்காளர்களாக மாறினார்கள் என்பதை ஆறு மாதங்கள் ஆய்வு செய்து மக்கள் மனதில் எடுத்து சொன்னார்கள். ராகுல் காந்தி மஹாராஷ்டிரா வில் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலுக்கு இடைப்பட்ட 4 மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்களை அதிகபடுத்தினார்கள். அரியானாவில் இது போல் அதிகப்படியான வாக்காளர்கள் இருந்தனர். பீகாரீல் 65 லட்சம் வாக்காளர்களை ரத்து செய்தனர் இதனால் தான் பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றது. இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல மத்திய அரசு அதற்கு கைபாவையாக துணை போகும் தேர்தல் ஆணையம்
கண்டித்து, தமிழக காங்கிரஸ் வாக்கு திருடு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக குழித்துறை சந்திப்பு பகுதியில் மேற்கு மாவட்ட தலைவர் வினு லால் சிங் தலைமையில் இந்த கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளது கிராமம் நகரம் என வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து கையெழுத்து பெற உள்ளதாக தெரிவித்தார் இந்த கையெழுத்து கள் காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பப்பட்டு தலைமை ஜனாதிபதி யை சந்தித்து இந்தியாவின் நிலை குறித்து எடுத்து சொல்வார்கள்.
பாஜக உள்துறை அமைச்சர் அமிர்ஷா கூட்டணி கட்சியான அதிமுகாவை இயக்குகிறார் அமித்ஷா கூறுவதையே எடப்பாடி செய்கிறார்.
இது பாஜகவின் கைவந்த கலை எல்லா மாநிலங்களிலும் ஜாதி மாதத்தை வைத்தும் பாசிச அரசை நடந்தி ஓட்டு வங்கி உருவாக்கி கொண்டு இருக்கிறது. அது போல தமிழகத்தில் நடந்தால் என அமித்ஷா அடிக்கடி வந்து கொண்டு இருக்கிறார். அது தாமரையில் தண்ணீர் ஓட்டாதோ அது போல தமிழகத்தில் ஒட்டாது.
காங்கிரஸ் தேசிய இயக்கம் இந்திய கூட்டணி அகில இந்திய அளவில் உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவாக உள்ளது. எங்களது கடை நிலை தொண்டர்கள் மன நிலையை பிரதி பலித்து உள்ளேன். அவர்களது விருப்பம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பல படுத்தி உள்ள அளவில் அதிக தொகுதிகளை கேட்க வேண்டும் என்பதே தொண்டர்கள் சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை அதை காங்கிரஸ் அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து உள்ளோம் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதி கேட்க தலைவர்கள் தொண்டர்கள் உரிமை உள்ளது அதை தான் நான் பிரதிபலித்து உள்ளேன் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கிராம அளவில் வாக்குசாவடி அளவில் கட்சி பல படுத்த முடுக்கி விடப்பட்டுள்ளன 2லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கீவர் கோடோடு அடையாள அட்டை வழங்கி உள்ளோம். தமிழகத்தில் அடித்தட்டு அளவில் ராகுல் காந்தியை நம்பி அதிக இளைஞர்கள் வருகிறார்கள் வாக்கு திருட்டை தடுக்க வாக்குகளை பாதுகாக்க காங்கிரஸ் கட்சியில் இணைகின்றனர் என்று பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.