• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மரியாதை தராததை கண்டித்து கண்டனம்..,

ByKalamegam Viswanathan

May 26, 2025

மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார். அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில் உரிய மரியாதை தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மரியாதை வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை இதனை கண்டித்து சமயநல்லூரில் அரசு பள்ளி எதிரே தேனூர் கிராமத்தினர் மற்றும் அரசியல் சமூக அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

இந்து சமய அறநிலை துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இனிவரும் காலங்களில் இது போன்று தவறுகள் நடைபெறா வண்ணம் தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.