சிவகாசி அருகே, சாலை விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாப உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுஜய் (18). இவர் சிவகாசி – திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சுஜய் தினமும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு தனது நண்பர் ரிஷி (19) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். சிவகாசி அருகேயுள்ள ரிசர்வ்லைன் அருகே வந்தபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி திடீர் விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய சுஜய் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரிஷி படுகாயமடைந்தார். விபத்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று சுஜயின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ரிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)