• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மூன்று வண்ண மணலால் ஆட்சியர் அழகு மீனா ஓவியம்..,

குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த 70_வது அகவை தினத்தை குமரி கொண்டாடும் வேளையில். குமரியில் பெண் ஆட்சியர் வரிசையில் 4_காவது பெண் ஆட்சியாளர் அழகுமீனா.

குமரியின் புதிய அதிசயமாக, மாவட்ட மக்களையும் கடந்து சர்வதேச சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கடலில் கண்ணாடிப் பாலம் தமிழக அரசின் ரூ.38_கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்.

ஐயன் திருவள்ளுவர் சிலை- சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடற்பரப்பின் மீது கட்டப்பட்டிருக்கிறது.

பாலத்தின் பணியாளர்கள் எப்படி பணிக்காக பாலத்திற்கு படகில் சென்றிருப்பார்களோ, அதற்கு இணையாக.

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா பாலத்தின் பணிகளை கால, நேரம் இன்றி ஏன். இரவில் கூட பாலத்தின் நிறைவடைந்த கண்ணாடிப் பாலத்தை ஆய்வு செய்தவர்.

அரசு பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற, கொட்டாரம் பகுதியை சேர்ந்த
ஓவிய ஆசிரியர் கோபால். கன்னிய்குமரி கடற்கரையில் இயற்கை படைத்த அதிசயம் ஆன வெள்ளை, சிகப்பு,கரும்நீலம் மண்ணை பயன் படுத்தி வரைந்த, நல்லாளுமை விருது பெற்ற ஆட்சியர் அழகு மீனா அவர்களது ஓவியத்தை, ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து நேரில் வழங்கி மகிழ்ந்தார்.