• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை கலெக்டர் ஆய்வு..,

ByT. Balasubramaniyam

Oct 15, 2025

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை
மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் , உத்தரவின் படி திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரையவெட்டி, கோவில் எசனை மற்றும் வெங்கனூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து வெங்கனூர் சுவாதி சினேகா திருமண மண்டபத்திலும் மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கழுமங்கலம் மற்றும் தத்தனூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் பொ . இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்படுதல், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகள் அளிக்கப்படுவதையும் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி பார்வையிட்டார். மேலும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு தாது உப்பு கலவைகளையும் வழங்கினார்.

மேலும், 15.07.2025 முதல் 14.10.2025 வரை நடந்து முடிந்துள்ள 95 முகாம்களில், பட்டியலிடப்பட்ட சேவைகள் (Listed Services) தொடர்பாக 24,959 மனுக்களும், பிறசேவைகள் (Unlisted Services) தொடர்பாக 33,036 மனுக்களும் ஆகக் கூடுதல் 57,995 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் ஒட்டுமொத்தமாக 26,619 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இம்முகாமில், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்).பழனிசாமி, வட்டாட்சியர்கள் சம்பத்குமார் , முத்துலட்சுமி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்