சவுக்கு சங்கர் மீது காவல்துறையின் தொடர் நடவடிக்கைகள். ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தும் நிலையில். காவலர்களின் பாதுகாப்பிலே சவுக்கு சங்கர் எழுப்பிய கோசம். தி மு க அரசு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னை பார்த்து அச்சப்படுகிறார்கள். அதனால் தான் என் மீது பொய் வழக்கு போடுகிறார்கள், அழைத்து செல்கிறார்கள் என சப்தமாக சொன்னார். வழக்கறிஞர்கள் புடை சூழ்ந்து நீதிமன்றத்திற்கு உள்ளே சென்றார் சவுக்கு சங்கர்.
களியக்காவிளை காவல்துறை பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்ததின் அடிப்படையில் இன்று (ஆகஸ்ட்_8) குழித்துறை குற்றவியல் நடுவர் எண்.1 ல் சவுக்கு சங்கரை ஆஜர் படுத்திய நிலையில்.
குழித்துறை குற்றவியல் நடுவர் எண் 1.அவர்கள் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
குழித்துறை குற்றவியல் நடுவர் எண் 1 ன் தீர்ப்பு நொடி பொழுதில் குமரி மாவட்டம் முழுவதும் பரவி மக்கள் மத்தியில் ஒரு பேச்சு பொருளாகி வலம் வருகிறது.





