• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை பாரக் மைதானத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழா…

BySeenu

Dec 14, 2025

கோவையை சேர்ந்த ரஷ் ரிப்பப்லிக் நிறுவனம் நடத்தும் மாபெரும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் திருவிழாவான “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு கோவை கொடிசியா அருகே உள்ள பாரக் மைதானத்தில் இரண்டு நாட்கள் நடக்கிறது.

இதன் துவக்க விழாவில் பார்க் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அனுஷா ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் குடும்பமாகவும், நண்பர்களாகவும் வந்து ஷாப்பிங் செய்ய ஏராளமான பொருட்கள் உள்ளன. துவக்க நாளான இன்று பிரபல ராக்ஸ் பள்ளிக்கூடம் – சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இன்று சிறப்பாக நடைபெற்ற ‘நாய்களுக்கான போட்டிகள்’ அங்கு கூடிய மக்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சி பற்றி ரஷ் ரிப்பப்லிக் நிறுவனத்தின் இணை-நிறுவனர் லக்ஷ்மிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

இது “சாண்டா’ஸ் சோசியல்”-லின் 8ம் பதிப்பு. இதை கோவை ராக்ஸ் பள்ளிக்கூடம் கோவை மக்களுக்காக வழங்குகிறது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சூர், கொச்சின், பெங்களூரு என தென்னிந்தியாவின் பல இடங்களில் இருந்து 100 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இன்றும் நாளையும் இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. 5 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இலவசம். 5 வயது முதல் பெரியவர்கள் அனைவர்க்கும் நுழைவு கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.