• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Byகாயத்ரி

Nov 15, 2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட வந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதற்கட்டமாக தோவாளையில் உள்ள சேதமடைந்த பெரியகுளத்தை பார்வையிட்டார். பின்னர் அருகில் உள்ள முகாமில் தங்கியிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் வரலாறு காணாத அளவில் சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த பகுதிகளையும் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்தார் .

முதல் கட்டமாக தோவாளையில் உள்ள கரைகள் உடைந்து சேதம் அடைந்த பெரியகுளத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் அருகில் உள்ள முகாமில் கிராமங்களில் இருந்து மீட்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.