• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புத்தாண்டு சலுகை சரக்கு வாங்கினால் சிக்கன் 65 இலவசம்

தமிழகத்தில் காய்கறி தொகுப்பு பை வாங்கினால், ஆறு முட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மதுரை திருமங்கலம் தெருவில் அமைந்துள்ள இறைச்சிக்கடைக்காரர் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடி சலுகைகள் சமீபத்தில் வழங்கினார்.

ஒரு கிலோ ஆட்டு இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடி அறிவிப்புகளும் வந்துள்ளது. ஆனால் புதுச்சேரி என்றாலே எல்லோருக்கும் மதுபானங்கள் தான் முதலில் ஞாபகம் வரும். புதுவையையொட்டி உள்ள தமிழக எல்லையில் மதுப்பிரியர்கள் கூட்டமும் அலைமோதும். தள்ளாட்டமும் இருக்கும். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்ட துவங்கி உள்ளது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பார்களில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில ரெஸ்டாரண்டுகளில் 2 பீர் வாங்கினால், ஒரு பீர் இலவசம் என சலுகைகள் வழங்குகிறது.

இதற்கிடையே புதுச்சேரியில் குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என மதுபான கடை விளம்பரத்தால் குடிமகன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுச்சேரி தவளக்குப்பம் சாலையில் அமைந்துள்ள தனியார் மதுபான கடையில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர். அதில் சிறப்பு சலுகை என அறிவித்து குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாங்கினால் சைடிஷ் இலவசம் என்பது நேற்று துவங்கி நாளை வரை இச்சலுகை வழங்கப்படுகிறது. மகிழ்ச்சியடைந்த குடிமகன்கள் காலை முதலே வருகை தந்து சரக்குடன், சைடிஷ்ஷை வாங்கி வருகின்றனர். சிக்கன் வாங்கினால் முட்டை இலவசம் என்பது மாறி குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என அறிவித்து இருப்பது குடிமகன்களை கவர்ந்து வருகின்றனர்.