• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சி.பி.எம்.(CBM) மோட்டார்ஸ் எனும் புதிய விற்பனை மையம்

BySeenu

Dec 16, 2024

எலக்ட்ரிக் பைக் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (SVM) பிராணா இ பைக் , தனது அங்கீகரிக்கப்பட்ட டீலரான சி.பி.எம்.(CBM) மோட்டார்ஸ் எனும் புதிய விற்பனை மையத்தை எஸ்.வி.எம். நிறுவனத்தின் சி.எஃப்.ஓ. ஆட்ரோன் லியோ (Adron Leow) திறந்து வைத்தார்.

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ வாரு மோட்டார்ஸ் (SVM) நிறுவனம் தனது பிரானா எனும் இ பைக்கை தயாரித்து விற்பனை செய்வதில் முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மோகன்ராஜ் ராமசாமி அறிவுறுத்தலின் பேரில், தனது பிரானா மாடல் இ. பைக் விற்பனையை விரிவு படுத்தும் விதமாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டீலர்ஷீப் மையங்களை துவக்கி வருகின்றனர்.

இதன் முதல் கட்டமாக கோவை குணியமுத்தூர் பகுதியில் புதிய டீலர்ஷிப் கிளை துவக்க விழா நடைபெற்றது. சி.பி.எம்.(CBM) மோட்டார்ஸ் எனும் புதிய டீலர்ஷிப் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்.வி.எம். நிறுவனத்தின் சி.எஃப்.ஓ. ஆட்ரோன் லியோ (Adron Leow) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், புதிய டீலர்ஷிப் நிறுவனமான சி.பி.எம். மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் டேவிட் பால்ஃபர் கலந்து கொண்டார். இ பைக் தயாரிப்பில் 2.0 என அனைத்து நிலைகளிலும் மேம்படுத்தப்பட்ட இ-பைக்கான பிராணா மாடல் இரண்டு வேரியண்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கிராண்ட் (Grand) மற்றும் எலைட் (Elite) என இரண்டு விதமான வேரியண்ட்டுகளில் வரும் பிராணா கிராண்ட் ஐந்து கிலோ வாட் திறன் கொண்ட 72V லித்தியம்-அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும். மற்றொரு வேரியண்டான எலைட்டில் அதிக ரேஞ்ஜை வழங்குவதற்காக 8.5 திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என எஸ்.வி.எம். மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.