மதுரை பொறியாளர் நகரை சேர்ந்த நடேச பாண்டியன் இவர் மதுரை திருமங்கலம் அருகே உள்ள அன்னை பாத்திமா கேட்டரிங் கல்லூரி டைரக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து மதுரை திருமங்கலம் நான்கு வழி சாலை கூத்தியார் கூண்டு அடுத்து வந்து கொண்டிருந்தபோது அவர் பின்னால் வந்த டாரஸ் லாரி இவர் கார் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் நிலைகுலைந்து சாலையில் எதிர் திசையில் போய் கார் கவிழ்ந்தது. காரானது முற்றிலும் உருகுலைந்தது நடேச பாண்டியன் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் காயம் இன்றி உயிர் தப்பினார்.
தகவல் அறிந்த கப்பலூர் டோல்கேட் ஆம்புலன்ஸ் மற்றும் ரெக்கவரி வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் நிலை குலைந்து இருந்த காரை அப்புறப்படுத்தி திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.