• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேப்டன் விஜயகாந்தின்41_வது நாள் நினைவு அஞ்சலி மெளன ஊர்வலம்.

கன்னியாகுமரியில் இன்று மாலை (பெப்ரவரி-06) அனைத்து கட்சி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்ற. கேப்டன் விஜயகாந்த் மறைந்த 41_வது நாள் நினைவு அஞ்சலி மெளன ஊர்வலம் நடைபெற்றது.

கன்னியாகுமரி விவேகானந்தா புரம் பகுதியில் இருந்து, கன்னியாகுமரி அண்ணா சிலை ரவுண்டானா வரையிலான 2 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற மெளனம் அஞ்சலி ஊர்வலத்தில். காங்கிரஸ்,திமுக,அதிமுக, பாஜக, கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சியை சார்ந்த பல்வேறு பொருப்பாளர்கள்,என அனைத்து கட்சியினர் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

மெளனம் அஞ்சலி ஊர்வலத்தின் நிறைவில். அண்ணா சிலை பாதத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த,தே மு தி மு க நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி நிறைவு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் அந்த பகுதியில் நின்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது. ஒரு ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது.