சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த விஜயதாரணிக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கொடுக்காமல் பாஜக தலைமை அவரை கைவிட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை. விளவங்கோடு எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருக்கிறது. இதனால் விஜயதாரணி முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.