• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரவுடியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்…சர்ச்சையில் சிக்கிய எஸ்.ஐ

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிரபல ரவுடியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போலீஸ் எஸ்ஐ மற்றும் தனிப்பிரிவு காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இவரது பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அவரது நண்பர்கள் மற்றும் சகாக்களின் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது உதவி ஆய்வாளர் வசந்தகுமார் மற்றும் தனிப்பிரிவு காவலர் சுப்பிரமணி ஆகியோரை வைகுண்ட பாண்டியன் (எ) வைகுண்டம் சால்வை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஒருவரை அரிவாள் பிடியால் தாக்கியதாக கூறி போலீஸார் வைகுண்டத்தை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு குற்றங்கள் நிலுவையில் உள்ளதால் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிறந்த நாள் போலீஸார் கலந்து கொண்ட புகைப்படம் வைரலானதை அடுத்து இருவரையும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்