• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிறந்த தேர்தல் அதிகாரி – சத்யபிரதா சாகு!

மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார்.

1997 ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சத்யபிரதா சாகு, சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர்.

2018 ஆம் ஆண்டு அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்காணி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சத்யபிரதா சாகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவை இவரது தலைமையில் நடைபெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது .

இந்த சூழலில் அவருக்குச் சிறந்த தேர்தல் அதிகாரிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காகச் சிறந்த தேர்தல் அதிகாரி என்ற பிரிவின் கீழ் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.