• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

19-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை..!

Byகாயத்ரி

Feb 15, 2022

தமிழகத்தில் நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வருகின்ற 19-ம் தேதி அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த நாளில் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. எனவே தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், கிளைகளுக்கு வருகிற 19-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் கிளைகளுக்கு விடுமுறை கிடையாது.