• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பழனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

ByKalamegam Viswanathan

Apr 8, 2025

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கிரிவலப் பாதையில் பல ஆண்டுகளாக கை வியாபாரிகள் பக்தர்களிடம் வியாபாரம் வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்தொழிலை
நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒராண்டுக்கு முன்பு திருதொண்டர் சபை ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி திருக்கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றபட்டது. இந்நிலையில் கிரிவலபாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்லாதவாறு அடைக்கபட்டது. மேலும் இரண்டு மாதங்களாக கை வியாபாரிகளை கிரிவலப் பாதையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து 300 குடும்பங்களும் வருமானமின்றி தவித்து வருகின்றனர். தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் வறுமையில் வாடும் 300 குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டு கை வியாபாரிகளை கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

இந்த ஆர்பாட்டத்தில் தலைமையாக பொதினிவளவன் , செந்தில்குமார் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களாக விசிகவை சேர்ந்த பாவேந்தன், வாஞ்சிநாதன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முருகானந்தம், முத்துவிஜயன், சுந்தர், வீரமணி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த மாரிக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேர்ந்த கோசலை, ராஜன், மக்கள் நீதி மையம் சிவாஹாசன் மற்றும் அடிவாரம் கை வியாபாரிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு தேவஸ்தான நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.