கன்னியாகுமரி ரயில்வே நிலையம் முன்பாக நேற்று மாலை நடந்த பரபரப்பு சம்பவம் ஒன்று பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் இடலாக்குடியை அடுத்துள்ள ஆனைப்பாலம் பகுதியைச் சேர்ந்த விஷ்னுநிதி என்ற இளைஞர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தன்னையே தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்துக்குப் பின்னர் பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். விஷ்னுநிதி தீவிரமாக காயமடைந்த நிலையில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனது மோட்டார் சைக்கிளை போலீசார் பிடித்து வைத்ததிலேயே இதற்கான காரணம் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த இளைஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தீக்குளித்த இளைஞரது இருசக்கர வாகனத்தை ஒரு காவலர் ரெயில்வே நிலையம் அருகே தடுத்து நிறுத்தியதுடன். இருசக்கர வாகனத்தையும் எவ்விதமான காரணங்கள் சொல்லாது தடுத்து நிறுத்தி பரித்துக்கொண்டது,அவரது மனதை மிகவும் பாதித்ததே இந்த செயலுக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கையில், சம்பந்தப்பட்ட இளைஞரின் பைக்கை தாங்கள் எப்போதும் பிடித்திருக்கவில்லை என்றும், இவ்வாறான குற்றச்சாட்டு தவறானது என்றும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.