• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாக்கு சேகரிப்பின் போது விஜய்வசந்திற்கு அருட்கன்னியர்கள் சால்வை அணிவித்துநெற்றியில் சிலுவை குறியிட்டு வாழ்த்து

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் விஜயகுமார் (எ) விஜய வசந்த் நாள்தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றார். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்துவியும் உற்சாக வரவேற்பை அளித்து வருகின்றனர்.

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டம் பகுதியில் துவங்கப்பட்ட பிரச்சாரம் இரணியல், திங்கள் நகர், ரீத்தாபுரம், குறும்பனை, வாணியக்குடி, கோடிமுனை, குளச்சல் கடற்கரை, கூத்தா விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இதில் இந்திய கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அருட் கன்னியர்கள், விஜய் வசந்திற்கு சால்வை அணிவித்து வெற்றிக்கு வாழ்த்து சொன்னதுடன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தின் நெற்றியில் சிலுவை குறியிட்டு வெற்றிக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

வாக்கு சேகரிக்க சென்ற வெற்றி வேட்பாளர் விஜய்வசந்த்திற்கு மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும், பொன்னாடைஅணிவித்தும், மாலை அணிவித்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்கு பிறகு குருந்தன்கோடு, கண்டன் விளை,பேயன்குழி, வில்லுக்குறி, பள்ளம் , பரசேரி, ஆலூர், சுங்கான் கடை, பெருவிளை, காரங்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய வாக்கு சேகரிப்பின் போது பேசிய வேட்பாளர் விஜய்வசந்த்

வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல் பாஜக அரசை அகற்ற வேண்டிய தேர்தல், இந்திய கூட்டணி வெல்ல வேண்டும் மக்களாட்சி வர வேண்டும், ஜனநாயகம் காக்க வேண்டும்,அதற்கு நாம் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்,

பாஜக அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என சொன்னார்கள் செய்ய வில்லை. ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை 10 பைசா கூட செலுத்தவில்லை மாறாக ஏழை மக்களை வங்கி கணக்கை தொடங்க வைத்து மினிமம் பேலன்ஸ் இல்லை என்ற காரணத்தைக் காட்டி மக்களின் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்துள்ளனர்.

பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்து மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர். எனவே இந்த ஆட்சியை அகற்ற நாம் இந்திய கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இந்த தேர்தலில் இந்திய கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைக்கும் நமது முதல்வர் சொன்னது போன்று தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40
வெல்வோம் அதற்கான முதல் வெற்றியை நமது குமரியில் இருந்து துவங்குவோம்..
என கூறி வாக்கு சேகரித்தார்.

,