1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி செப்டம்பர் 6 இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாகப்படினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சு. செல்வக்குமார், இ.கா.ப., அவர்களின் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உறுதிமொழி: இந்திய அரசியலமைப்பின் பாலும், தமிழ்நாடு காவல்துறையின், உயரிய நோக்கங்களின் பாலும், நான் உண்மையான ஈடுபாடும் உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன் என்று மனமாற உறுதி கூறுகிறேன். எந்தவித அச்சமோ விருப்பு வெறுப்போ இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.

அதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள். மாவட்ட ஆயுதப்படை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர் தினம் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.






; ?>)
; ?>)
; ?>)
