• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மனோ தங்கராஜ் கைது செய்து சிறையில் அடையுங்கள்..,

மழைக்காலம் விரைவில் வரவிருக்கிறது. மழை காலத்தில் தொற்று நோய் அதிகமாகமாகும் என்பதால் தொத்து நோய்கள் வராமல் இருக்க பல்வேறு தடுப்பு முயற்சிகளில் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. அரசியல் வாதிகளுக்கு தேர்தல் சொரம் வரும், அதுபோல் நம்முடைய மதிப்பிற்குரிய அமைச்சர் மனோதங்கராஜ்க்கு இப்போதே தேர்தல் சொரம் வந்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள 38_ மாவட்டங்களில். குமரி மாவட்டம் வித்தியாசமானது.
இங்கு மதத்தை சொல்லியே காங்கிரஸ்_ திமுக கூட்டணி வெற்றி பெற்று விடுகிறது.

2016 சட்டமன்ற தேர்தலில் 6_தொகுதிகளிலும் காங்கிரஸ்திமுக வெற்றி பெற்றது. 2021தேர்தலில் திமுக பத்மநாபபுரம் தொகுதி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது.

சட்டமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில். மனோதங்கராஜ்யின் வெற்றி கேள்வி குறியாக உள்ள நிலையில். தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற நோக்கில்

டெல்லியில் 1966_நவமபர் 7_ம் தேதி தலைவர் காமராஜர் வீட்டை ஜனங்கம், ஆர்எஸ்எஸ் தீ இட முயன்றது என சொல்லி மனோதங்கராஜ் மற்றும் 50_க்கும் அதிகமான சமுக விரோத கும்பல் கருப்பு சட்டை அணிந்தது மட்டும் அல்ல. காமராஜர் சிலைக்கு கருப்பு துண்டு போர்த்திய செயல் கண்டனத்திற்கு உரியது. மனோதங்கராஜின் செயலை கண்டித்து. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற உரத்த குரலில் பொன்னார் தெரிவித்ததோடு.

கன்னியாகுமரியில் இருக்கும் காமராஜர் நினைவு மண்டபம் எங்களுக்கு ஒரு கோவில்

தேர்தல் நேரத்தில் மாவட்ட மக்களை மதத்தால் இரண்டு துண்டாக்கி பாஜகவை காட்டி பயத்தை உண்டாக்கி வெற்றி பெற்று விடலாம் என மனோதங்கராஜ் நினைக்கிறார் எனவும்.பொன்னார் தெரிவித்தார்.