கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 12வது ஆண்டு வருஷாபிஷேகம் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணபதி ஹோமம், நவகலச பூஜை நடைபெறும். காலை 10 மணிக்கு 16 வகையான ஷோடசா அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெறும்.
மாலையில் அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தை வலம் வருவார். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துவருகிறனர்.