இந்தியாவின் தென் கோடி மாவட்டம் கன்னியாகுமரி. இங்குள்ள பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில். 1996-2001 வரை சட்டமன்ற பாஜகவின்,தமிழகத்திலே முதல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் வேலாயுதம்.

இவர் அண்மையில் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தின் சார்பில், வேலாயுதம் வசித்த வீட்டின் அருகில் உள்ள தென்னம் தோப்பில் நிறுவப்பட்ட வேலாயுதத்தின் முழு உருவ சிலையை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில். தமிழக சட்டமன்ற பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன் மற்றும் ஏராளமான பாஜகவினர் பங்கேற்றனர்.


நிகழ்வில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி. அண்ணாச்சி வேலாயுதம் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினராக ஒரு முறை தான் வெற்றி பெற்றார். ஆனால் அவர் வாழ்நாள் முழுவதும் பத்மநாபபுரம் மக்களின் ஒரு சேவகனாக அவர் வாழ்வின் கடைசி நாள் வரை திகழ்ந்தார் என குறிப்பிட்டார்.

நயினார் நாகேந்திரன் அவரது பேச்சில். அவர் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி தமிழக சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களும் அண்ணன் வேலாயுதம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியதை சிலை திறப்பு விழா நிகழ்வில் நினைவு கூர்ந்தார்.


சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி பேச்சில் குமரி மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு அவர் வாழ் நாள் முழுவதும் உறுதுணையாக இருந்தார் என தெரிவித்தார்.

மாநில தலைவர் அண்ணாமலை பேச்சில். தலைவர் வாஜ்பாய் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூத்த தலைவர்களின் அன்பை பெற்றவர். அன்றைய தமிழக முதல்வர் கலைஞரின் அன்பை மட்டுமே அல்ல பாராட்டையும் பெற்றவர் தலைவர் வேலாயுதம் என தெரிவித்தவர் தொடர்ந்து தெரிவித்த கருத்து. தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட ஒரு முறை தெரிவித்தார். நான் கலைஞர் பெற்றெடுத்த பிள்ளை,சி.வேலாயுதம் அவர் பெற்றெடுக்காத மகன் என தெரிவித்தார். அரசியலில் நமக்கும், திமுக விற்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால் முன்னாள் முதல்வர் கலைஞர், இன்றைய முதல்வர் ஸ்டாலினின் உயர்ந்த மனித நேய பண்பை என்றும் போற்றுவோம் என உரையாற்றினார்.