• Mon. Apr 29th, 2024

தேசிய அளவில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற ஆண்டிபட்டி மாணவிக்கு உற்சாக வரவேற்பு .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த கல் உடைக்கும் கூலி தொழிலாளி மகள் ராஜேஸ்வரி, குஜராத் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து , சொந்த ஊருக்கு வருகை தந்த மாணவிக்கு மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் , இந்து முன்னணி அமைப்பின் சார்பாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

     குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி 36 வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 32 அணிகள் மோதிய கபடி போட்டியில் தமிழக மகளிர் அணி பி பிரிவில்பங்கு கொண்டு வெற்றி பெற்ற தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சேர்ந்த கல்லுடைக்கும் தொழிலாளி மாரிமுத்து என்பவரின் மகள் ராஜேஸ்வரிக்கு (21 )ஆண்டிபட்டியில் பஸ் நிலையம் அருகே மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன் தலைமையில் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர்.எஸ்.பி. எம் செல்வம் தலைமையில் ,மாவட்ட செயற்குழு மொக்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கனகராஜ் ,கருப்பையா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தும் ,சால்வை அணிவித்தும்  பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்து மாவட்ட கவுன்சிலர். ஜி.கே.பாண்டியன் கூறியதாவது ,சாதாரண கல் உடைக்கும் தொழிலாளியின் மகள் தேசிய அளவில் வெற்றி பெற்றிருப்பது எங்கள் கிராமத்திற்கும், தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் என்று தெரிவித்தார். ஜீவன் டிரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பாக இயக்குனர் முருகேசன் மாணவிக்கு பொன்னாடை அணிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *