• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

திருவனந்தபுரம் புறப்பட்ட அம்மன் விக்கிரகங்கள்.., காவல்துறையின் துப்பாக்கி பாதுகாப்பு…

சுசீந்திரத்தில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட அம்மன் விக்கிரகங்கள், தமிழக, கேரள காவல்துறையின் துப்பாக்கி பாதுகாப்புடன் நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பழங்காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது ஆண்டு தோறும் 10 நாட்கள் நவராத்திரி விழா குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனையில் கோலகலமாக நடத்தப்பட்டது. பின்னர் 1840ம் ஆண்டில் இருந்து திருநாள் மகாராஜா காலத்தில் நிர்வாக வசதிக்காக இந்நிகழ்சி திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அவ்வாறு நடத்தப்பட்ட காலத்தில் குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மனும், வேளிமலை முருகனும், கம்பரால் வழங்கப்பட்ட பத்பநாபபுரம் அரண்மனை சரஸ்வதி அம்மன் விக்கிரகம் ஆகிய மூன்று சாமி சிலைகள் மிக பிரம்மாண்டமான ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. அந்த விக்ரகங்கள் 10 நாட்கள் நவராத்திரி விழா முடிவடைந்த பின் மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
பாரம்பரியமான இந்த நவராத்திரி விழா வருகிற 3ம் தேதி தொடங்க இருப்பதால் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் புறப்படும் நிகழ்சி நாளை(1ந் தேதி) பத்பநாபபுரம் அரண்மனையில் நடைபெறுகிறது. இங்கிருந்து தமிழக, கேரள மாநில அறநிலை துறை மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் சுவாமி விக்ரகங்கள் புறப்பாடு நடைபெற உள்ளது.

முன்னுதித்த நங்கை அம்மனுக்கு இரு மாநில போலீஸார் இணைந்து செண்டை மேளங்கள் முழங்க, வாத்தியங்கள் இசைத்து துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பல்லக்கில் எழுந்தருளிய சுவாமி ஊர்வலம் கோலாகலமாக புறப்பட்டது. அப்போது சுசீந்திரம் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் சாலையின் இருபுறமும் மலர்தூவி நங்கை அம்மனை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

இந்த ஊர்வலம் நாகர்கோவில் , பார்வதிபுரம், சுங்கான்கடை, வில்லுகிறி, வழியாக இன்று மாலை பத்மநாபபுரம் அரண்மனையை சென்றடைந்தது. இதே போல் வேளிமலை முருகன் விக்ரகமும் பல்லக்கில் மாலைக்குள் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது. நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னர் மார்த்தாண்டவர்மாவின் உடைவாளுடன் சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சாமி விக்ரகங்களும் பிரம்மாண்டமான ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி அரங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் பிரபா G. ராமகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவைத் உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், குமரி மாவட்ட அரங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.