59-வது பிஎஸ்ஜி கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து முதல் நாள் போட்டியில் கேரளா மாநில மின்சார வாரியம், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்திய விமானப்படை அணிகள் வெற்றி பெற்றது…

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 59-வது பிஎஸ்ஜி கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் துவங்கியது. இப்போட்டிகள் வரும் 27-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. இப்போட்டிகள் கோவை, பீளமேடு, பி.எஸ்.ஜி. இன்ஜினியரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றது. இதற்கான அனுமதி இலவசமாகும்.
இதன் துவக்க விழாவை பி.எஸ்.ஜி. புற்றுநோய் மைய இயக்குனர் டாக்டர். பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். கௌரவ விருந்தினராக பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர் பிரகாசம் கலந்து கொண்டார். பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.

முதல் போட்டியில் சென்னை – இந்தியன் வங்கி அணி எதிர்த்து கோவை – ராஜலட்சுமி மில்ஸ் ஹெச்எஸ்எ அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 97 – 73 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் புது தில்லி – இந்திய ராணுவ அணியை எதிர்த்து திருவனந்தபுரம் – கேரளா மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 71 – 69 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.
மூன்றாவது போட்டியில் புது தில்லி – இந்திய விமானப்படை அணியை எதிர்த்து பெங்களூர் – பேங்க் ஆப் பரோடா விளையாடியது. இதில் இந்திய விமானப்படை அணி 85 – 74 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.

நான்காவது போட்டியில் சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து லோனாவாலா – இந்திய கப்பல் படை அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 80 – 73 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது.