பிரபல இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் தனது படம் ஒன்றில் நடிக்க வைக்க ஹேமமாலினியை ஒப்பந்தம் செய்து, பின்னர் 4 நாட்கள் நடிக்க வைத்து விட்டு, நடிப்பு சரியில்லை என்று ஒதுக்கி வைத்துவிட்டார் என்று நடிகை ஹேமமாலினி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகின் புகழ்பெற்ற இயக்குனர் சி.வி. ஸ்ரீதர் தன்னுடைய படம் ஒன்றில் நடிக்க தன்னை ஒப்பந்தம் செய்து, சுஜாதா என பெயர் மாற்றி 4 நாட்கள் நடிக்க வைத்துவிட்டு பிறகு, சரியில்லை என படத்தில் இருந்து தூக்கிவிட்டார் என்று ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை ஹேமா மாலினி, தான் ஒரு தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாக இருந்ததாகவும், ஆனால் 4 நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு, சூடான உருளைக்கிழங்கு போல் கைவிடப்பட்டதாகக் கூறினார். நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டதால் கடினமாக உழைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தூண்டியது என்றும் தன்னை நிரூபிப்பதற்காக அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன் என்றும் கூறினார்.
இது குறித்து அவர் ஒரு நேர்காணலில், ஹேம மாலினி, தமிழ் திரைப்பட இயக்குனர் சி.வி. ஸ்ரீதர் அவர்களால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும், அவர் தனது பெயரை சுஜாதா என்றும் மாற்றியதாகவும் கூறினார். இந்த படத்தில் ஜெயலலிதாவும் நடிக்கவிருந்ததாக ஹேம மாலினி கூறினார். ஆனால், ஹேம மாலினி அதில் நடிக்கும் அளவுக்கு சரி இல்லை என்று இயக்குனர் கருதியதால் அவர் நிராகரிக்கப்பட்டார்.
ஒரு காலத்தில், சென்னையில் பல கிளாசிக்கல் நடன நிகழ்ச்சிகள் நடக்கும் என்றும், அங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் புதிய நடிகைகளைத் தேடுவார்கள் என்றும் ஹேம மாலினி நினைவு கூர்ந்தார். ஸ்ரீதர் தான் ஹேம மாலினியை நடன நிகழ்ச்சி ஒன்றில் கண்டுபிடித்து அவருடைய அம்மா மூலம் ஒப்பந்தம் செய்தார் என்று ஹேம மாலினி மிகவும் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார்.
“அவர் என்னை நிராகரித்தபோது, அது அதிர்ச்சியாக இருந்தது, அது ஒரு பெரிய அதிர்ச்சி. ஆனால், அது நடந்தது நல்லது. ஏனென்றால், நான் உழைக்க வேண்டிய உந்துதலைக் கொடுத்தது. நான் இப்போது காட்ட வேண்டும். அவர் என்னை நிராகரித்தார், அவருக்கு எவ்வளவு தைரியம். எனவே, நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்ததைச் செய்ய விரும்பினேன்” என்று அவர் கூறினார்.
அதன்பிறகு, 1968-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான சப்னோ கா சவுதாகர் திரைப்படம் மூலம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் நடிகை ஹேம மாலினி கூறினார். இருப்பினும், ‘மன்னிப்போம் மறப்போம்’ என்ற கருத்தை தான் நம்புவதால், தனக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று ஹேம மாலினி கூறினார்.
1973-ம் ஆண்டு ‘கெஹ்ரி சால்’ திரைப்படத்தில் ஸ்ரீதருடன் பணிபுரிந்ததாக நடிகை ஹேம மாலினி கூறினார். மேலும், அவரை மிகவும் நல்லவர் என்று நினைவு கூர்ந்தார். “ஆனால், என்னை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்த பிறகு நீங்கள் என்னை நிராகரித்ததாக நான் ஒருபோதும் சொல்லவில்லை. நாங்கள் அதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை” என்று ஹேமமாலினி கூறினார்.