கன்னியாகுமரியை அடுத்துள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கலைக் கல்லூரியில்.
திரைப்பட நடிகை கெளதமி பங்கேற்ற மாணவ,மாணவிகளுடனா கலைத்துறையாடல் நிகழ்விற்கு.விவேகானந்தர் கல்வி கழகத்தின் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ராஜன் மற்றும் கல்வி கழகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வில்.

கன்னியாகுமரி சட்டமன்றத் அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், சிறப்பு விருந்தினர் திரைப்பட நடிகை கெளதமி ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை கெளதமி மாணவர்கள்,மாணவிகள் அவர்களுள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவரது பேச்சைத் தொடங்கியவர். அவர்கள் பள்ளி பருவத்தில் 12 வருடங்களை கடந்து. இன்று கல்லூரியில் முதலாமாண்டு மாணவ, மாணவிகள் இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு என்ற நிலையில் இருக்கும் மாணவ,மாணவிகளின் முன் இருக்க வேண்டிய உறுதியான தீர்மானம். எத்தகைய பொருளாதார நிலையிலும் நம்மை படிக்க வைக்கும் பெற்றோர்களின்,கனவை நனவாக்கும், உங்கள் ஒவ்வொரு வரின் எதிர்காலம்,வேலை வாய்ப்பு இவற்றை எட்டும் வெற்றியாளர்களாக நீங்கள் கவனமாக, உங்கள் பேராசிரியர்கள் கற்பிக்கும் கல்வியில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மாணவர், மாணவிகள் எழுப்பும் கேள்விகளை எதிர் கொள்ள கெளதமி தயாராக இருப்பதாக தெரிவித்த போதும்.
திரண்டு இருந்த மாணவ சமுகம் அவர்களுக்குள் என்ன கேள்வி கேட்க்கலாம் என அவர்களுக்குள் விவாதம் நடத்திக்கொண்டு இருந்த நிலையை உடைத்து.
கல்லூரி முதல்வர் பேராசிரியர் மகேஷ் மாணவிகள் சிலர் பெயர்களை அழைத்து மாணவிகளின் தயக்கம் போக்கச் செய்ததும். அதன்பின். சந்தியா என்ற மாணவி. கெளதமியை நோக்கி எழுப்பிய கேள்வி.
ஒரு திரைப்பட நடிகை என்ற நிலையில் அவர் சந்தித்த சவால்கள் எவை என எழுப்பிய கேள்விக்கு

கெளதமி சொன்ன பதில் நான் பொறியியல் துறையில் EEE_ மாணவி. நடிப்பு என்பது என்னவென்றே தெரியாத நான், சற்று எதிர் பாராத நிலையில்”குரு சிஷ்யன்’ என்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் அவர்களின் மகன் பிரபு உடன் நடித்தேன் , தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்தேன். கிட்டத்தட்ட 130_திரைப்படங்களில் பாபநாசம் திரைப்படம் வரை என தெரிவித்தார்.
மூன்றாம்ஆண்டு ஆங்கிலம் பயிலும் மாணவன் அஷ்வின் எழுப்பி கேள்வி.
இளைஞர்களுக்கு இன்றைய உலகில் எது சவால் என்று கேள்வி எழுப்பிய அஷ்வீனை மேடைக்கு அழைத்து மாணவனுக்கு கை கொடுத்து. நல்ல கேள்வி என பாராட்டி அதற்கான காரணங்களை விளக்கமாக தெரிவித்தார்.
நீங்கள் அதிகம் நேசிப்பது யாரை.?
கெளதமியின் பதில்

எனக்கு தாய் இருவர் ஒன்று என்னை பெற்றெடுத்த தாய், மற்றொரு தாய்
அரசியலில் எனது வழிகாட்டியாய் புரட்சி தாய் ஜெயலலிதா என தெரிவித்தார்.
திரைப்பட நடிகை கெளதமி பங்கேற்ற நிகழ்வில். விவேகானந்தா கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியை நிறைவாக எழுப்பிய கேள்வி. புற்றுநோய் என்னும் உயிர்க்கொல்லி நோயை வென்று சரித்திரம் படைத்தது என்ற கேள்வியை, அந்த நிகழ்வில் கெளதமியே சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார். கேள்வி எழுந்ததும் சட்டென்று அவர் வெளிப்படுத்தியது.

எனது மனவலிமை என் அனுமதியின்றி காலனும் என் உயிரை எடுத்து விட முடியாது. நோய் பாதிப்பு ஏற்பட்ட 33_ வயதில் புற்று நோயின் கோரத் தாண்டவத்தை என் உடலில் இருந்து விரட்டியடித்தேன். அதற்கு காரணம் என் தாய் ஒரு மருத்துவர் உடன் இருந்து கவனித்து எனக்கு மன தைரியத்தை அதிகப்படுத்தினார். கெளமதியின் பதில் கேட்டதும் அரங்கில் மாணவர்கள் மத்தியில் எழுந்த கை ஒலி அடங்க வெகு நேரமானது.
தளவாய் சுந்தரத்துடன் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்
தாமரை தினேஷ், அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், மற்றும் பார்த்தசாரதி ஆகியோரும் பங்கேற்றனர்.