அடியாட்களை, குண்டர்களை வைத்துள்ள கட்சி அதிமுக இல்லை, தியாகத்தின் சீடர்களாக தொண்டர்களை வைத்துள்ள இயக்கம் அதிமுக. எங்களை திசை திருப்பவே வன்முறை, தாக்குதல் நடத்தப்படுகிறது என உசிலம்பட்டியில் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி நகர் கழக நிர்வாகிகளுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.,
அதிமுகவினர் வன்முறையை கண்டால் அஞ்சி ஓடுகிறவர்கள் அல்ல, வன்முறை என்றால் அல்வா சாப்பிடுவதை போல அதை எதிர்கொள்ள தயாராக இருப்பவர்கள்.
எல்லோரும் இந்த மண்ணில் பிறந்தவர்கள், எல்லோரும் வீர மங்கை வேலு நாச்சியார் வழி வந்தவர்கள், எல்லோருக்கும் எல்லாம் தெரியும் ஆனாலும் மௌனமாக இருக்கிறோம்.
வன்முறை என்பது கூர்மையான ஆயுதம், ஒரு பகுதியில் உள்ள கூர்மையான ஆயுதத்தை வன்முறையாளர்கள் கையில் எடுத்தால் மறுபகுதி இருக்கும் கூர்மையான ஆயுதம் அதை பயன்படுத்த தயாராக இருக்கிறது என்பதை மட்டும் வன்முறையாளர்கள் மறந்துவிட கூடாது என்பதை பாடம் எடுக்கிறோம்.
வன்முறையால் ஒரு கட்சியை வளர்க்க முடியுமா என்றால் இல்லை, முதன்முதலிலே அதிமுக நாடாளுமன்ற தேர்தலை திண்டுக்கல்லில் சந்தித்த போது, ஆளும் கட்சியாக இருந்த திமுக, காங்கிரஸ் கட்சியை தாண்டி, அன்று 6 மாத பச்சிளம் குழந்தையாக இருந்த அதிமுக வெற்றி வாகை சூடியது., அப்போது பார்க்காத வன்முறையா, வத்தலக்குண்டு ஆறுமுகம், சுதாகரன் போன்றவர்கள் உயிர் தியாகம் செய்து தான் இந்த இயக்கத்தை வளர்த்தார்கள் என்ற வரலாறு தெரியும்.
வன்முறை மூலமாக எங்கள் கவணத்தை திசை திருப்ப முடியாது., ஆக்கப்பூர்வமாக அதிமுக தொண்டன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்.
அதில் சில பேருக்கு வயிற்று எரிச்சல், எடப்பாடி பழனிச்சாமி கட்சியை மீட்டு, தொண்டர்களை மீட்டு, தலைமை கழகத்தை மீட்டு இன்று தான் நாம் சுகந்திரமான காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.
அம்மாவின் திருப்பெயரில் அடிமை சாசனம் நடத்தி வந்தார்கள் அவர்களிடத்திலிருந்து சுகந்திர பிரகடனத்தை எடப்பாடி பழனிச்சாமி பெற்றுத் தந்துள்ளார்., 2 கோடியே 18 லட்சம் தொண்டர்களின் பாதுகாவலராக உள்ளார்.
நேற்று தினேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாங்கள் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்துக் கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை செய்யும் போது எடப்பாடியார் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது சேடபட்டியில் என கேட்கிறார் என்றால் தொண்டர்களின் பாதுகாவலர் எடப்பாடி பழனிச்சாமி, நாங்களே அதிசயித்து போனோம்.
இந்த வன்முறையே நம்மை திசை திருப்ப தான், உண்ணாவிரத போரட்டம் வெற்றி, அம்மா பேரவை உண்ணாவிரத போராட்டம் வெற்றி, எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு வந்த போது கொடுத்த வரவேற்பால் வெற்றி மேல் வெற்றி என்ற வயிற்று எரிச்சல்.
அதிமுகவினரின் கவனத்தை திசை திருப்ப எதை வேண்டுமானாலும் செய்வார்கள்,
அடியாட்களை, குண்டர்களை வைத்துள்ள கட்சி அதிமுக இல்லை, தியாகத்தின் சீடர்களாக தொண்டர்களை வைத்துள்ள இயக்கம் அதிமுக இங்கு குண்டர்களுக்கு வேலை இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி வழிகாட்டுதலில் பேரில் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்., வன்முறையை கையில் எடுத்தவர்கள் வன்முறையால் தான் அழிந்து போய் இருக்கிறார்கள் என வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கையாக சொல்லி, நாங்கள் இன்று மக்களிடத்தில் சகோதர பாசத்தோடு மக்கள் பணி செய்கிறோம், போராட்டங்களை கவணம் செலுத்தி மக்கள் பணியே மகேசன் பணி என்று உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்று அன்போடு, பன்போடு, நாகரீகத்தோடு சொல்கிறோம், பன்பாட்டோடு சொல்கிறோம் ஆனால் எங்கள் கைகளும் மாங்காய் பறித்துக் கொண்டிருக்காது என்பதையும் சொல்கிறோம் இது எச்சரிக்கை அல்ல வேண்டுகோள்.
நீங்கள் எந்த பாதையை தேர்தெடுத்தாலும் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல எங்கள் பாதை மக்கள் சேவையே மகேசன் சேவை என பேசினார்.