• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருமாவளவனின் நற்பெயரை கெடுக்கும் செயல்-காயல் அப்பாஸ்..,

ByKalamegam Viswanathan

Oct 8, 2025

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

உச்சநீதிமன்ற நீதிபதியின் மேல் செருப்பை வீசிய சம்பவத்தை கண்டிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற வாசலில் 07 09 2025 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது உரையை முடித்து விட்டு வாகனத்தில் வரும் போது திட்டமிட்டு வாகனத்தை வேனும் என்று வழி மறித்து வம்புக்கு இழுக்கும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

திருமாவளனன் வாகனம் தான் இருசக்கர வாகனத்தை இடித்து விட்டதாக ஒரு பொய்யான செய்திகளை பரப்பி வரும் இத்தகை கண்டிக்க தக்க தாகும்.மேலும்.திருமாவளவனை வம்புக்கு இழுத்து அவர் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தி இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்கிற நோக்கத்தோடு நடந்த சம்பவமாக பார்க்க முடிகிறது.

ராஜீவ் காந்தி என்கின்ற வழக்கறிஞரின் இத்தகை செயலை சாதரனமாக கடந்து செல்ல முடியாது . ஆகவே வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் முழு நோக்கம் என்ன இவர் யாரின் தூண்டுதலில் இதை செய்தார் என்கிற கோனத்தில் காவல் துறையினர் உரிய விசாரனையை மேற் கொண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.

எனவே : இந்திய அளவிள் சனாதனத்தை எதிர்த்தும் எந்தவித சமரசத்திற்கும் செவி சாய்க்காமல் அரசியலில் களம் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் திருமாவளவனுக்கு உயர் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய. மாநில அரசுகளை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.