• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எம்ஜிஆர் பிறந்த நாளில் நினைவு கூறுவதை நன்றியுடன் பொது விழா..,

கன்னியாகுமரியை அடுத்த சுக்குப்பாறைத் தேரிவிளை சந்திப்பில். 40_ஆண்டுகளுக்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த எம்ஜிஆர்., ரசிகர்களின் ஒன்றித்த முயற்சியில், நிறுவப்பட்ட எம் ஜி ஆர் சிலை நிறுவிய நாள் முதல். எம்ஜிஆர் பிறந்த தினத்தில் விழா காண்பது மட்டும் அல்ல.

சுக்குப்பாறைத்தேரிவிளை பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி. மதியம் மீன் குழம்பு, பொரியல் உடன் அருமையான உணவு விருந்தின் அகவை 40.
இந்த நிகழ்வில் அந்த பகுதியில் உள்ள பெரும் தலைவர் காமராஜரின் சிலைக்கும். சிறப்பு விருந்தினர்களான தளவாய் சுந்தரம் நாஞ்சில் வின்சென்ட் பி.சி.அன்பழகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

எம்ஜிஆர்யின் 109வது. பிறந்தநாளில் ஊர் கூடி தேர் இழுத்தல் போன்ற விழவாக ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் விழாவாக நடக்கும் நிலையில். இன்றைய எம்ஜிஆர் 109_ வது பிறந்த தினம் முதல் நிகழ்வாக. எம்ஜிஆர் சிலைக்கு. கன்னியாகுமரி சட்டமன்ற அ.தி.மு.க.உறுப்பினர் தளவாய் சுந்தரம், முன்னாள் தமிழக அரசின், நிதித்துறை இணை அமைச்சராக, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த நாஞ்சில் வின்சென்ட், திரைப்பட இயக்குநர்,அ.தி.மு.க.,கலை இலக்கிய பிரிவு இணைச்செயலாளர் பி.சி.அன்பழகன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் தாமரைதினேஷ், குமரி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.ஆர்.ரபீக், பேரூர் கழக செயலாளர் சிவபாலன், தம்பி தங்கம், ஒன்றிய இணை செயலாளர் முத்துசாமி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர்
சி.ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய சிறப்பு விருந்தினர் நாஞ்சில் வின்சென்ட் அவருக்கும். தலைவர் எம்ஜிஆர் இடையே இருந்த 18 ஆண்டுகள் நட்ப்பின் உச்சம். அவரை அமெரிக்கவிற்கு அனுப்பி உயர் கல்வியை கற்க வைத்தது இவரது பாதையை கல்வி கற்பிக்கவைக்கும்
பள்ளி, கல்லூரிகள் தொடங்க வைத்த முதல் புள்ளி வைத்த தலைவரை அவரது 109_வது பிறந்த நாளில் நினைவு கூறுவதை நன்றியுடன் பொது விழாவில் வெளிப்படுத்தினார்.

நிகழ்வில் பேசிய குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம்,அவரது பேச்சில். கடந்த 40_ ஆண்டுகளாக நடக்கும் எம் ஜி ஆர் பிறந்த நாளை ஒரு பெரும் விழாவை தடையே இல்லாது தொடர்ந்து, தலைவர் தினம் விரும்பி உண்ணும் மீனுடன்.உணவில் மீன் பதார்த்தங்கள் உடன் கொண்டாடும் எம்ஜிஆர் தொண்டர்களை மனமார வாழ்த்துவதாக தெரிவித்தார்.

நிகழ்வில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழாவின் நிறைவில் வரும் சட்டமன்ற தேர்தலில். கன்னியாகுமரி அ.தி.மு.க., வேட்பாளராக மீண்டும் தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னத்தில் முத்திரையிட்டு தளவாய் சுந்தரத்தின்
வெற்றிக்கு உறுதுணையாக இருங்கள் என. தேர்தல் பிரச்சாரமும் தொடங்கி வைக்கப்பட்டது.