மதுரை பசுமலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி தனது 50-வது பொன்விழா ஆண்டைக் கொண்டாடி வரும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு தொழில்நுட்பத் திருவிழாவான ‘Tech Campus ’25’ நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது.

இக்கல்லூரியின் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகள் இணைந்து இம்மாபெரும் நிகழ்வை நடத்துகின்றன.
ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த முகாமில், அரசு பள்ளி மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அங்கங்கள் இடம்பெற்றுள்ளன. நவீன கண்டுபிடிப்புகள் குறித்த மாணவர்களின் படைப்புகள், மெய்நிகர் உலகை நேரில் அனுபவிக்கும் வசதி, மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கும் கணினி விளையாட்டுகள் இடம்பெற்றது.

இத்துடன் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டு துறை சார்பாக மாணவர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் விதமாக உணவு உடை ஆபரணம் என பல்வேறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் தொழில்நுட்பத் துறையை சார்ந்த யோகேஸ், மணிபாலா, ஆகாஷ் என்கிற மாணவர்கள் காணொளி மூலம் மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள குழாய்களின் வாழ்வை திறந்து மூட புதிய செயல் முறையை கண்டுபிடித்துள்ளனர்.

அதை செயலி மூலம் காணொளியில் எத்தனை வாழ்வுகள் திறந்து மூட வேண்டும் என்பதை சைகையில் மூலமே செய்து காட்டி அதன்மூலம் வால்வுகளை திறந்து மூடும் புதிய செயலியை மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் இதன் மூலம் குழாய்களில் உள்ள வாழ்வுகளை திறந்து கூட செல்லும் நேரம் மற்றும் தேவையில்லாத அலைச்சல் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதும் வீட்டில் உள்ள வயதானவர்கள், , மாற்றுதிறனாளிகள், உடல்நலமில்லாதவர்களுக்கு வரப்பிரசதமாக புதிய கண்டுபிடிப்பு உதவும்.

இந்த புதிய செயலி மூலம் செயல் மூலமாகவே இருந்த இடத்திலிருந்து காணொலி வழியில் வாழ்வுகளை திறந்து மூட முடியும் மேலும் நேரடியாக சென்று குழாய் வாழ்வுகளை திறந்து மூட வயதானவர்கள் மற்றும் உடல்நலம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் அசவுரிய குறைவுகள் இந்த புதிய செயலின் மூலம் இருந்த இடத்திலிருந்து யார் வேண்டுமானாலும் குழாய்களில் உள்ள வாழ்வுகளை திறந்து மூட சாத்தியமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.




