• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோவையில் முதன்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய உயர் தரத்திலான மறுவாழ்வு மையம்

BySeenu

May 19, 2024

கோவையில் முதன்முறையாக பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஹெல்த்கேர் தொடர்பான மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டது..சந்திரா பவுண்டேஷன்,செய்ஃபர் (SEIFER) பவுண்டேஷன் இணைந்து துவங்கியுள்ள இதில்,உயர் தரத்திலான நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் சிறப்பு நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களை கொண்டு இயங்க உள்ளதாக மறுவாழ்வு மையத்தின் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனைகளில் நோய்க்கான சிகிச்சை எடுத்து முடித்தாலும்,காயம், அறுவை சிகிச்சை, நோய் அல்லது நோயைத் தொடர்ந்து, அல்லது வயதுக்கு ஏற்ப அவர்களின் செயல்பாடு குறைந்துவிடுவதால், நோயை தாண்டி மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப ஒரு கட்டத்தில் மறுவாழ்வு மையங்கள் அவசியமாக உள்ளன..அந்த வகையில்,கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய செய்ஃபர் (SEIFER) பவுண்டேஷன் எனும் மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளது.சந்திரா பவுண்டேஷனுடன் இணைந்து துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா செய்ஃபர் (SEIFER) பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் கிஷோர் குமார் மணிகண்டன்,சந்திரா பவுண்டேஷன் தலைவர் லயன் அரவிந்த் மகுடேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் ரவிச்சந்திரன்,ராம்பிரசாத்,சுரேஷ் கோகுல்தாஸ் மற்றும் லயன்ஸ் கிளப் 324 D மாவட்டத்தின் கேபினட் பொருளாளர் சுரேந்தர் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.கோவையில் இது போன்ற நவீன வசதிகளுடன் முதன் முறையாக துவங்கப்பட்ட இதில்,பெண்கள் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக உடற்பயிற்சி, உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.இது குறித்து மறுவாழ்வு மையத்தின் நிறுவனர்கள் கூறுகையில்,,பக்கவாதத்திற்குப் பிந்தைய விரிவான உடல் மறுவாழ்விற்கான நவீன முறை சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், பல்வேறு காயங்கள் அல்லது குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான் சிறப்பு அணுகுமுறை வசதிகள் உள்ளன.

மேலும், முதுகெலும்புடன் தொடர்புடைய காயங்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பிரத்யேக உடற்பயிற்சிகள் மூலமாக உடல் இயக்கத்தை மீண்டும் பெறவும், செயல்பாட்டை மேம்படுத்தவும் வகையில் வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு அல்லது உடற்பயிற்சி தொடர்பான காயங்களால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்களை மறுவாழ்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தி விளையாட்டு வீரர்களின் வலிமை, மற்றும் செயல்பாட்டை மீட்டெடுக்கும் வகையில் தேர்ந்த நிபுணர்கள்,மருத்துவர்கள் இங்கு இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அறுவைசிகிச்சை, கீமோதெரபி , கதிர்வீச்சு சிகிச்சை போன்ற புற்றுநோய் சிகிச்சைகளுக்கு உட்பட்ட நோயாளிகளுக்கு உதவும் வகையிலும் இந்த மறுவாழ்வு மையம் செயல்பட உள்ளதாகவும், நோயாளிகள் தங்கள் நிலைமைகளை நிர்வகிக்க மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பயிற்சிகள், என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த மறுவாழ்வு மையம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.