• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 50 ஆயிரம் பேர் முன்பதிவு

ByA.Tamilselvan

Oct 7, 2022

அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல 50 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் விரும்புவார்கள்.
தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் சொந்த ஊர்களுக்கு 21-ந்தேதியே (வெள்ளிக்கிழமை) பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் ஆம்னி பஸ்களிலும் புக்கிங் செய்து வருகின்றனர். ரெயிலில் இடம் கிடைக்காத சாமான்ய மக்கள் அரசு சிறப்பு பஸ்களை எதிர் பார்த்து கொண்டு உள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்பதிவு அரசு பஸ்களில் 50 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டு கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு 10-ந்தேதி வெளியாகும். முதல் கட்டமாக 450 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடந்து வருகிறது. இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.