• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு எப்போது..??

Byகாயத்ரி

Sep 8, 2022

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ’சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, கோவை சரளா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர் என்பதும், தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.