• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஓணம் பண்டிகைக்கு கோல்ட் பட ரிலீஸ் இல்லை…

Byகாயத்ரி

Sep 3, 2022

நயன்தாரா- பிரித்விராஜ் நடித்துள்ள கோல்ட் என்ற படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகாது எனவும் இதற்கு அவர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பிரேமம். இப்படத்தில் சாய் பல்லவி, அனுபமா, நிவின்பால் உள்ளிட்ட நடிகர்கள் நடித்தனர். இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தை அடுத்து, அல்போன்ஸ் இயக்கியுள்ள படம் கோல்ட், இப்படத்தில் நயன் தாரா, பிரித்விராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் போஸ்ட் புரோடெக்சன் பணிகல் நடந்து வருகிறதது. இந்த நிலையில், ஓணம் பண்டிகைமுன்னிட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்படம் ஓணம் பண்டிகைக்கு வெளியாகாது எனவும் இதற்கு அவர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வரலாம் எனத் தெரிகிறது.