• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ட்விட்டரில் இணைந்த சியான்.. பின்தொடர அலைமோதும் ரசிகர்கள்..!

Byகாயத்ரி

Aug 13, 2022

நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர் உறுதி செய்து நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில், அவரை நெட்டிசன்கள் மளமளவென பின் தொடர்ந்து வருகின்றனர்.சியான் விக்ரம் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள கணக்கை சுமார் 37,000 பேர் பின் தொடர்கின்றனர்.

ரசிகர்கள் அவரை அன்புடன் அழைக்கும் சியான் (@Chiyaan) என்ற யூசர் ஐடியில் விக்ரமின் அக்கவுன்ட் ஓபன் செய்யப்பட்டுள்ளது வரவேற்க்கதக்கது.