• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ்

ByA.Tamilselvan

Jul 18, 2022

கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். உடனே அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். ஆனால் சளி, இருமல் குறையாததால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள். அவருக்கு நுரையீரலில் 10 சதவீத அளவுக்கு சளி பாதிப்பு இருந்ததை கண்டறிந்தனர். உடனே ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சைகள் மேற்கொண்டனர். முழுமையாக குணம் அடைந்ததைத் தொடர்ந்து இன்று காலை முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் மேலும் ஒரு வாரம் வீட்டில் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.