• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000.. பதிவு செய்ய இன்று முதல் சிறப்பு முகாம்

Byகாயத்ரி

Jun 25, 2022

மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.

தாலிக்கு தங்கம் திட்டத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவிகள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தகுதியான மாணவிகளின் பெயரை பதிவு செய்ய இன்று முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் தகுதியுள்ள மாணவிகள் தங்களுடைய பெயரை பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.