• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

உக்ரைனின் கார்கிவை கைப்பற்றிய ரஷ்யா படைகள்

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 4 வது நாளாக ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தங்களுக்கு உதவுமாறு உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்து வருகிறது. அதன்படி, உக்ரைன் பிரதமரின் கோரிக்கை ஏற்று அமெரிக்கா, பிரான்ஸ், சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் ஆயுதங்கள் மற்றும் ராணுவ நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

அதே சமயம்,ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்குகிறது எனவும் தங்களுக்கு ‘ஸ்டார்லிங்க்’ மூலம் இணைய சேவை வழங்கி ரஷ்யாவை எதிர்க்க துணை நிள்ளுங்கள் என Mykhailo Fedorov ட்விட்டர் வாயிலாக மஸ்க்கிடம் உக்ரைன் அதிபர் உதவி கோரியுள்ளார். இதற்கு பதிலளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஸ்டார்லிங்க் சேவை இப்போது உக்ரைனில் செயல் பட துவங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

இதனிடையே, மறுபுறம் உக்ரைன் மீது முழு நடவடிக்கை எடுக்க ரஷ்யா அதிபர் உத்தரவிட்டிருந்தா நிலையில்,உக்ரைனை சுற்றிவளைத்து ரஷ்யா படைகள் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கி வருகிறது. தலைநகர் கீவ்-ஐ ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இந்நிலையில்,உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி தந்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.