• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் திமுக வேட்பாளர் வெட்டிக்கொலை

சென்னையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மடிப்பாக்கம் 188 வது வட்ட திமுக செயலாளராக பதவி வகித்தவர் செல்வம். இவர் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பில் 188 வது வார்டு
உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இரவு ராஜாஜி சாலையில் உள்ள தனது அலுவலகம் அருகே நிர்வாகிகளுடன் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வம் உயிரிழந்தார். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.