• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மகான் இரண்டாவது பாடல் கானா பாடலாக வெளியீடு

திரையரங்குகள் திறக்கப்பட்டு, 100% இருக்கை வசதி சுமுகமான சூழ்நிலை உருவான பின்பு படங்களை திரையிடும் முடிவில் தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர் இதனால் தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியீட்டுக்காக காத்திருக்கும் படங்களில் மட்டும் சுமார் 2000ம் கோடி ரூபாய் மூலதனம் முடக்கப்பட்டிருக்கிறது.


இந்த சூழ்நிலையில் தியேட்டரில் தான் வெளியாகும் என கூறப்பட்டு வந்த விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள 60 வது படம் மகான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் வேலைகளை தொடங்கியிருக்கிறது படக்குழு

அதன் ஒரு பகுதியாகமகான் இப்படத்தின்இரண்டாவது பாடல் வெளியாகி இருக்கிறது. ‘எவன்டா எனக்கு கஸ்டடி..’ எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கும் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியிருக்கிறார். இந்தப் பாடல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கில் ‘யெவ்வர்ரா மனகி கஸ்டடி..’ என்றும், மலையாளத்தில் ‘இனி ஈ லைப்ஃபில்..’ என்றும், கன்னடத்தில் ‘யவனோ நமகே கஸ்டடி..’ என்றும் வெளியாகியிருக்கிறது.


‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தில் விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ‘மகான்’ வெளியாகிறது.

கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.மகான் என்பது, தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார்.

அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை என்கிறார் இயக்குனர் சுப்புராஜ்.