• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முதல்வர் லண்டன் பயணம்அரசு பயணமா அல்லது தனது செல்வாக்கை நிலை நிறுத்த விளம்பர பயணமா?

ByKalamegam Viswanathan

Sep 15, 2026

தமிழக முதலமைச்சர் விஜய் தொழில் முதலீட்டை ஈர்க்க கடந்த பத்தாம் தேதி லண்டன் சென்றார் .லண்டனில் தொழில் முதலீட்டுக்காக சென்றார் என்று கூறப்பட்டாலும் அது தொடர்பான எந்த ஒரு தொழிலதிபர்கள் சந்திப்பு அல்லது உறுதியான முதலீடு தகவல்களோ வரவில்லை வெளியிடப்படவில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மற்றும் எதிர் கட்சி தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் குற்றச்சாட்டு முன்வைத்தவுடன் ,நேற்று செவ்வாய் 12,000 கோடியில் தமிழ்நாட்டில் முதலீட்டு செய்வதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அவசர அவசரமாக படமும் செய்தியும் அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆறு நாள் அரசு பயணமாக சென்ற முதல்வர் விஜய் சில்வர் ஸ்டோன் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் முதலிலேயே வெளியானது அதோடு சேர்ந்து அன்புக்குரியவருடைய திரைப்படமும் வெளியானது.

பலகாலம் தமிழ்நாட்டில் தான் முதல்வர் விஜய் அவர்களும், திரைப்பட நடிகர், ரசிகர் செல்வாக்கு பெற்று , தமிழ் திரை உலகின் மிகப்பெரிய செல்வாக்கோடு இருக்கிற அஜித்குமார் தமிழ் திரையிலேயே பலகாலமாக பங்களிப்பு ஆற்றி வருகின்றார்கள் .அப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் காட்டப்படாத அன்புமழை, நெருக்கம் தற்போது நடிகர் அஜித் மீது முதலமைச்சர் விஜய் அன்பை பொழிந்தது முற்றிலுமாக இயல்பானதாக நமக்கு தெரியவில்லை இயல்பானதாகவும் அந்த காட்சி அமையவில்லை .

மாறாக முதல்வர் விஜயின் இந்த பாச அரவணைப்பில் அவசியம் என்ன வந்தது நிச்சயமாக ஒன்று மட்டும் புரிகிறது அஜித்தின் ரசிகர் செல்வாக்கை தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா என்கிற நிலையிலே தான் இந்த அணுகுமுறை அமைந்ததாக எல்லோராலும் விமர்சிக்கப்படுகிறது.

மொத்தத்திலே இந்த அன்பு அரவணைப்பில் உண்மை இருக்கிறதா அல்லது தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கான நோக்கம் இருக்கிறதா என்று விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

தொழில் துறைகளை ஈர்ப்பதற்காக, முதலீடுகளை ஏற்பதற்காக முதல்வரோடு தொழில்துறை அமைச்சர் செல்லாமல் விளையாட்டு துறை அமைச்சர் ஆதார் அர்ஜுனா மற்றும் அன்புக்குரியவர்கள் சென்றிருப்பது தொழில் முதலீடுகளுக்கு முதல்வர் விஜய் தருகின்ற முக்கியத்துவத்தை ஒரு சர்ச்சையாக எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 12,300 கோடி முதலீடுகளை புரிந்துள்ள ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட மதர்சன் குழுமம் தமிழ்நாட்டில் ஏற்கனவே 32 ஆலைகளை நடத்தி ஒரு நிலையில், அந்த குழும்பத்துடன் லண்டன் சென்று முதல்வர் விஜய் முதலீட்டிற்காக ஒப்பந்தத்தை கையெழுத்துட்டு இருப்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே தொழில் முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுடன் புதிய முதலீட்டு ஒப்பந்தம் செய்வதற்காக முதல்வர் விஜய் நேரடியாக வந்தது சென்றிருக்க வேண்டியது அவசியம் என்ன என்ற கேள்வியோடு தமிழகத்தில் செயல்பட்டு வரும் அந்த நிர்வாகத்துடனும் சென்னை தலைமை செயலகத்திலே கூட ஒப்பந்த மேற்கொள்ள முடியும் அரசுக்கு அதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்றெல்லாம் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது.

இதற்காகவே மட்டுமே தனிப்பட்ட பயணத்திட்டம் தயாரித்து லண்டன் சென்று ஒப்பந்தம் செய்திருப்பதன் உண்மையான நிலை என்ன என்ற கேள்வி தான் நாட்டு மக்களிடம் இப்போது எழுந்து இருக்கிறது மொத்தத்தில் முதல்வர் விஜய் பயணம் அரசு பயணமா அல்லது தனிப்பட்ட பயணமா என்ற கேள்வி மக்களிடத்திலே எழுந்துள்ளது.
நியாயமான கேள்வி தானே.

இந்த பயணத்திற்கு அரசு நிதி செலவழிக்கப்படுகிறதா அப்படி என்றால் முதல்வர் விஜயுடன் யார் யார் சென்றிருக்கிறார்கள் அந்த விவரங்களில் வெளிப்படுத்தன்மையை தவெக அரசு கடைபிடிக்குமா?

தவெக அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து முக்கியமான நடவடிக்கைகள் அரசாணைகள் நியமனங்களுக்கான அரசாணைகள் மர்மமாகவே கையாளப்படுகிறது கட்சி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் சிலருக்கு பல்வேறு அரசு பதவிகள் மற்றும் வாரிய தலைவர்கள் பதவிகள் ஒதுக்கப்படுவது குறித்து இத்தகைய நியமங்களுக்கான அரசாணைகள் பொதுவெளியில் முறையாக வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்படுவது தவெக அரசின் வாடிக்கையாக உள்ளது.

மாநிலம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது அத்தியாவசிய பொருள்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து இருக்கிறது சட்டம் ஒழுங்கு மற்றும் பெண் பெண்களுக்கான பாதுகாப்பு பிரச்சனை போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது 11 லட்சம் கோடி கடன் இருக்கின்ற நிலையிலே 1200 கோடி ரூபாயிலே புதிய தலைமைச் செயலகம் அவசியமா என்றெல்லாம் விவாதம் எழுந்திருக்கிறது.

ஒரு புறத்திலே விவசாயிகள் போராட்டம் இன்னொரு புறத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் புதிய தலைமைச் செயலகம் அமைவதை எதிர்த்து மீனவர்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது மொத்தத்திலே மாநிலம் முழுவதும் நீதி கேட்டு பொதுமக்கள் வீதியிலே இறங்கி போராட்டம் நடத்தி
வருகின்றார்கள்.

இதையெல்லாம் தீர்க்க வேண்டிய, தீர்வு காண வேண்டிய முதல்வர் இவற்றையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவசர அவசரமாக முதல்வர் விஜயின் லண்டன் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமா அல்லது தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கான விளம்பர பயணமா லண்டன் பயணத்தினுடைய சர்ச்சைக்கு விடை கிடைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.