• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய யானை..,

ByKalamegam Viswanathan

Sep 14, 2026

உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பார்வதி என்கின்ற யானை உள்ளது. அதற்கு சற்று கண் பார்வை குறைந்த காரணத்தினால் தற்பொழுது அசாம் மாநிலத்தில் இருந்து துர்கா என்கின்ற ஐந்து வயது நன்கொடையாளர்களால் யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்கள் பயணம் செய்து இன்று அதிகாலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு யானையானது கொண்டுவரப்பட்டது. யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில்

விநாயகர் சதுர்த்தி நாளன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒரு புதிய யானை வந்தது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது மதுரை மீனாட்சி அம்மன் வருகின்ற 17ஆம் தேதி கும்பாபிஷேகமானது நடைபெற உள்ளது கோவிலில் பக்தர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். இதே போன்று மேலும் நான்கு யானைகள் பல்வேறு கோவிலுக்கு நன்கொடையாளர்களாக வழங்கப்பட்டுள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும் அசாமில் இருந்து நான்கு யானைகள் வழங்கப்பட்டுள்ளது மொத்தமாக ஐந்து யானைகள் தமிழகத்திற்கு நன்கொடையாளர்களாக வழங்கப்பட்டு உள்ளது.