• Tue. Jan 27th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

தொழிலாளி மீது கனிமவள லாரிமோதி விபத்து..,

கன்னியாகுமரி மாவட்டம் : தோட்டியோடு பகுதியில் வேலை முடித்து இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்த தொழிலாளி மீது,

கனிமவள லாரி ஒன்று வேகமாகவந்து மோதி விபத்தானதில், இருசக்கர வாகனத்தில் வந்த தொழிலாளியில் கால் முறிந்து படுகாயமடைந்தார்.

அங்கிருந்த போக்குவரத்து போலிஸார் ஆம்புலன்ஸ் வரவழைத்து காயமடைந்த தொழிலாளியை ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

கனரக வாகனங்கள் செல்ல குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது… எனினும் சில கனிமவள லாரிகள் நிபந்தனையை மீறி நேரம் கடந்து மிக விரைவாக செல்கின்றனர்.

தற்போதைய விபத்தும், கனிமவள லாரி அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து வேகமாக வந்து, சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒதுங்கி சென்ற தொழிலாளி மீது மோதியுள்ளது.

கனிமவள லாரிகள் குமரி சாலையில் ஓடும் காதலனின் அடையாளம் என மக்கள் மனதில் ஒருவகையான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.