• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மக்களை ஏமாற்றலாம் முருகனை ஏமாற்ற முடியாது-ஆர்.பி. உதயகுமார்…

ByKalamegam Viswanathan

Jan 11, 2026

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் , சோழவந்தான் தொகுதியில் உள்ள அலங்காநல்லூரில் நடைபெற்ற திண்ணை பிரசாரத்தை ,சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன் தலைமை தாங்கினார்.ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்டபொருளாளர் திருப்பதி, பேரூர் கழகச் செயலாளர்கள் அழகுராஜா, குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் லட்சுமி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா அனைத்துலக எம்ஜிஆர் மற்ற இணைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் விவசாய அணி மாவட்ட இணை செயலாளர் வாவிட மருதூர் ஆர்பி குமார் புதுப்பட்டி முன்னாள் கிளைச் செயலாளர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;;

முதன்முதலில் எடப்பாடியார் 2500 ரூபாயை பொங்கல் பரிசாக கொடுத்தார் அப்போது ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறினார் அதனை தொடர்ந்து விபத்தில் முதலமைச்சரான ஸ்டாலின் பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுக்க முன்வரவில்லை.

எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் 2027 ஆண்டு தைத்திருநாளில் ரூ.5000 பொங்கல் பரிசு வழங்குவார் கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவார். .

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் 4 லட்சம் கோடி அளவில் ஊழல் செய்துள்ளனர் .

நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 64,000 கோடி ஊழல் , ஊரக வளர்ச்சித் துறையில் 60,000 கோடி ஊழல், எரிசக்தி துறையில் 55,000 கோடி ஊழல், டாஸ்மாக்கில் 50,000 கோடி ஊழல், பத்திர பதிவு துறையில் 20,000 கோடி ஊழல், நெடுஞ்சாலைத்துறை 20,000 கோடி ஊழல், நீர்வள ஆதாரத் துறையில் 17,000 கோடி ஊழல், பள்ளிக் கல்வித் துறையில் 5,000 கோடி ஊழல், சுகாதாரத் துறையில் 5000 கோடி ஊழல், சமூகநல துறையில் 4 ஆயிரம் கோடி ஊழல், உயர் கல்வித் துறையில் 1500 கோடி ஊழல், இந்து சமய அறநிலைத்துறையில் ஆயிரம் கோடி ஊழல், ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆயிரம் கோடி ஊழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையில் 500 கோடி ஊழல், பால்வளத் துறையில் 250 கோடி ஊழல், வனத்துறையில் 500 கோடி ஊழல் ,சிறை துறையில் 250 கோடி ஊழல் என கடந்த நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் கோடி அளவில் மக்கள் வரிப்பணத்தை சூறையாடி முறையீடு செய்து திமுக அரசு கொள்ளை அடித்துள்ளது

இன்றைக்கு முதலமைச்சர் காரின் டயர் திருப்பரங்குன்றம் அருகே வெடித்து விட்டது மக்களை ஏமாற்றலாம் ஆனால் முருகனை ஒருபோதும் ஏமாற்ற முடியாது நீங்கள் 10 டயர் மாற்றினாலும் நிச்சயம் டயர் வெடிக்கும். இன்றைக்கு மக்களின் கோபம் டயர் போல வெடிக்கும் என்று முருகன் எச்சரிக்கையாக சொல்லி உள்ளார் .

திருப்பரங்குன்றம் தீபப் பிரச்சினைகள் நீதியரசர் தெளிவாக கூறியுள்ளார் நீதியரசர் தொல்லியல் துறை ஆய்வு செய்துதான் தீபம் ஏற்றலாம் என்று கூறியுள்ளார் இன்றைக்கு நீதிமன்ற உத்தரவை கூட செயல்படுத்த முடியாத அரசாக உள்ளது இதனால் ஒரு உயிர் பலியானது .நீதியரசர் தேர்வு மூலம் வெற்றி பெற்று தான் நீதிபதி ஆகி உளளார் ஸ்டாலினை போல கருணாநிதி வாரிசு அடிப்படையில் அவர் வரவில்லை.

இன்றைக்கு ஸ்டாலின் உதயநிதியை எப்படியாவது முதலமைச்சராக ஆக்கிவிட வேண்டும் என்று லட்சியமாகஉள்ளார்.

இன்றைக்கு தமிழகத்தில் ஜனநாயகம் தலை குனிந்து உள்ளது இதை நிச்சயம் தலைநிமிர செய்ய வேண்டும் நிச்சயம் எடப்பாடியார் தமிழகத்தின் தலையை நிமிர்த்தவர் என கூறினார்.